×

இந்திய ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், செப். 27: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2024-ம் ஆண்டிற்கான 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, டேராடூனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை 20224ம் ஆண்டிற்கான 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான தேர்வானது வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி நடைபெறுகிறது. இதில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியன்று பதினொன்றரை வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02.07.2011க்கு முன்னதாகவும் 01.01.2013-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது. மேலும் விண்ணப்பதாரர் இக்கல்லூரியில் அனுமதிக்கப்படும் போது, அவர் 2024- ஜூலை முதல் தேதியன்று அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். இத்தேர்விற்கான விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கர்ஷிகாண்ட், டேராடூன், உத்ரகாண்ட், 248003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பிப்பத்துடன் மேற்கண்ட முகவரி மற்றும் டேராடூன், டெல் பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் (வங்கி குறியீடு-01576) செலுத்தத்தக்க வகையில் பொதுப்பிரிவினர் ரூ-600-க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிவகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ-555க்கும் கேட்பு காசோலையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். அல்லது ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் உரிய தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை- 600003 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் சென்றடையவேண்டும். மேற்கொண்டு தேவைப்படும் விவரங்களை மேற்கண்ட இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post இந்திய ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Indian Army College ,Tiruvarur ,Rashtriya Indian Military College ,Dehradun ,Indian Military College ,Dinakaran ,
× RELATED அனைத்து தடுப்பணை கதவுகளும் திறப்பு;...