
நாகப்பட்டினம்,செப்.27: நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எம்எல்ஏ முகம்மதுஷாநவாஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். நாகப்பட்டினம் பாரதி மார்கெட் அருகே ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேசன்கடை, நாகப்பட்டினம் வண்டிப்பேட்டையில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயகூடம், பால்பண்ணைச்சேரி பகுதியில் ரூ. 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேசன் கடை ஆகியவற்றை திறந்து வைத்தனர்.
அப்போது தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் பேசியதாவது:
தமிழ்நாடு முதல்வர் நாகப்பட்டினத்திற்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டம் முன்னேற்ற பாதையில் செல்கிறது. தொகுதி எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் கட்டித்தரப்படும் கட்டிடங்களை பொதுமக்கள் முறையாக பராமரித்து வைத்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் தொடர்ந்து இன்னும் நிறைய கட்டிடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
The post அரசு கட்டிடங்களை முறையாக பராமரிக்கணும் appeared first on Dinakaran.