- வெங்கடாஜலபதி கோயில்
- Kolagalam
- திருவிஜந்தூர்
- மயிலாடுதுறை
- வெங்கடஜலாபட்டி கோயில்
- தெற்கு திருப்பதி
- திருவிழந்தூர்
- பேட்டை
- மயிலாடுதுறை
- தெரோதம்
- திருவிஜந்தூர்
மயிலாடுதுறை, செப்.27: மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் பல்லவராயன் பேட்டையில் உள்ள தென் திருப்பதி என்று அழைக்கப்படும் வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி மாத பிரமோற்சவ விழா முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி கடந்த 15ம் தேதி இரவு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று கடந்த 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அலமேலு மங்கைக்கும், சீனிவாச பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை வெண்ணெய்த்தாழியும், இரவு குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடும் நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று தேர் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று கோசமிட்டப்படி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். திருவிழந்தூர் வெங்கடாஜலபதி கோயிலின் நான்கு வீதிகளையும் சுற்றி வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post திருவிழந்தூரில் வெங்கடாஜலபதி கோயில் தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.