×

கர்நாடக அரசுக்கு திதி கொடுத்து விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக விவசாய சங்க மாநில துணைத்தலைவர் கக்கறை சுகுமாரன் அளித்த மனுவில், ‘‘காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லை. காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்று தர வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள், கர்நாடக அரசுக்கு திதி கொடுத்தும், கும்மியடித்தும் நூதன போராட்டம் நடத்தினர்.

ரயில் மறியல்: காவிரி உரிமை மீட்பு குழு மற்றும் அனைத்து கட்சி சார்பில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக பூதலூர் ரயில் நிலையத்திற்கு நேற்று காலை 11.50 மணிக்கு வந்தனர். போலீசார் தடையை மீறியும், தடுப்பு சுவர் மீது ஏறி குதித்தும் விவசாயிகள் நுழைந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து 180 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post கர்நாடக அரசுக்கு திதி கொடுத்து விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Karnataka government ,Thanjavur ,Collector ,Deepakjekep ,Thanjavur District Collector's Office ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வார்டுகளுக்கு சென்று குறைகள்...