×

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை

சின்னமனூர்: தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தேனி மாவட்டம், சின்னமனூர், காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் வடிவேல் (43). தேனி வருவாய்த்துறை முதுநிலை வருவாய் ஆய்வாளர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க தேனி மாவட்ட பொருளாளராகவும் இருந்தார். கடந்த 24ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த வடிவேல் மூளைச்சாவு அடைந்த நிலையில் குடும்பத்தார், வடிவேலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

இதன்பேரில் அவரது கண், இதயம், நுரையீரல், சிறுநீரகம், தோல் எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப்பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் ேநற்று பகல் 12 மணி அளவில் சின்னமனூருக்கு கொண்டு வரப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக வடிவேல் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏக்கள், கலெக்டர், எஸ்பி மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

The post தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chinnamanur ,Minister ,Ma. Suparamanian ,
× RELATED உயரழுத்த மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றம்