×

மன்மோகன் சிங் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, பிரதமராக அவரது தலைமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு இந்தியாவின் எதிர்காலத்தை மறுவடிவமைத்தது. அவரது ஆர்ப்பாட்டமில்லாத, அறிவார்ந்த மற்றும் பணிவான அணுகுமுறை எக்காலத்திலும் தலைமைத்துவத்திற்கு மதிப்புமிக்க படிப்பினைகளை வழங்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக என்றும் அவர் நினைவுகூரப்படுவார். இன்னும் பல்லாண்டுகள் அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

The post மன்மோகன் சிங் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Manmohan Singh ,Chennai ,M. K. Stalin ,M.K.Stalin ,
× RELATED கனமழை எச்சரிக்கை; திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்