×

வைரஸ் காய்ச்சல் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை வந்தார். அவர், சென்னை வட பழனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மணிக்கணக்கில் நின்று கொண்டே கட்சி நிர்வாகிகளையும், பார்வையாளர்களையும் சந்தித்துள்ளார். இதனால் மிகவும் சோர்வடைந்து, முதுகு வலி காரணமாக அவதிப்பட்டார். காய்ச்சலும் வந்துள்ளது.

இதையடுத்து வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ரத்த பரிசோதனையில், வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, திருமாவளவனை 2 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, வரும் 30ம்தேதி வரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் திருமாவளவனை சந்திக்க நேரில் வர வேண்டாம் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

The post வைரஸ் காய்ச்சல் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Tirumavavan Hospital ,Chennai ,Leopards Party ,Thirumavalavan ,Cuddalore district, Chennai ,Flu ,
× RELATED விசிக சார்பில் நடைபெறும் மாநாட்டில்...