×

மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு முகாம்

 

கோவை, செப். 27: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கிழக்கு மண்டலத்தில் 9 மனு, மேற்கு மண்டலத்தில் 8 மனு, வடக்கு மண்டலத்தில் 6 மனு, தெற்கு மண்டலத்தில் 7 மனு, மத்திய மண்டலத்தில் 16 மனு, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 7 மனு என மொத்தம் 53 மனுக்களை மேயர் பெற்றுக்கொண்டார். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், உதவி கமிஷனர்கள் செந்தில்குமார் ரத்தினம், சுந்தர்ராஜ், செந்தில், செந்தில்குமரன், மகேஷ்கனகராஜ், சந்தியா, நூர்அகமது, பிரேம்ஆனந்த் மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Corporation ,People's Grievance ,Camp ,Coimbatore ,grievance redressal camp ,Coimbatore Corporation ,Mayor Kalpana ,Corporation People's Grievance Redressal Camp ,Dinakaran ,
× RELATED அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக...