×

திண்டுக்கல்லில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

திண்டுக்கல், செப். 27: அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படம் கண்காட்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், தாமரைப்பாடி ஊராட்சி பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

இதில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முக.ஸ்டாலின், மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள், கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக மக்களின் துன்பங்களை போக்குவதற்கும், வாழ்வதாரத்திற்கு உதவும் வகையிலும் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள். அனைவருக்கும் 4,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்,

கலெக்டர் ஆகியோர் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக புகைப்படங்கள் இடம் பெற்று, பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை, தாமரைப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் அமரஜோதி, உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

The post திண்டுக்கல்லில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Dindukulle ,Dindukal ,Department of Public Relations ,Thindigul ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சப்பை...