
திண்டுக்கல், செப். 27: திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் நிர்வாகிகள் கூட்டத்தில், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு மற்றும் வாக்குச் சாவடி அமைத்தல், முகாம் கட்டுதல் குறித்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் மைதீன் பாபா தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் சந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சுவீட் ராஜா, தொகுதி செயலாளர் பெர்ணா, தொண்டர் அணி அமைப்பாளர் ரமேஷ், நகர பொறுப்பாளர் முத்துவீரன், மாவட்ட பொறுப்பாளர் பாபு முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் தமிழ் வளவன் வரவேற்றார். மண்டலச் செயலாளர் தமிழ்வாணன், மண்டல துணைச் செயலாளர் அன்பரசு, முன்னாள் மண்டல செயலாளர் தமிழ் வேந்தன், மாநில துணைச் செயலாளர் திருச்சிற்றன், மாநில பொறுப்பாளர் சர்தார் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில், தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் கட்ட முடிவெடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவாக நிர்வாகி செல்லையா நன்றி கூறினார்.
The post தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் appeared first on Dinakaran.