×

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

 

ஈரோடு, செப். 27: ஈரோடு மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டம், கள்ளிப்பட்டி, காந்திவீதி பகுதியில் ஒரு நபர், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை தன் வீட்டில் பதுக்கி வைத்து கடைகளுக்கும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்து வருவதாக பங்களாபுதூர் போலீசாருக்கு நேற்று முன் தினம் ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (64) என்பவரது வீட்டில் சோதனையிட்டனர்.அப்போது சுமார் 6.5 கிலோ மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.7,320 மதிப்பிலான பான்மசாலா, குட்கா உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

The post புகையிலை பொருட்கள் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Dinakaran ,
× RELATED ஈரோடு அருகே விவசாய நிலத்தில்...