×

பைக் திருடர்கள் கைது

 

மதுரை, செப்.27: டூவீலர்கள் திருடியவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை சிந்தாமணி விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் சண்முக குமார்(36). கண்ணன் காலனியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(30). இருவரும் கடந்த 24ம் தேதி இரவு தங்களது டூவீலர்களை வீட்டிற்கு வெளியே நிறுத்தி சென்றனர். நேற்று முன்தினம் காலை வெளியே வந்து பார்த்தபோது, வாகனங்கள் திருடப்பட்டிருந்தன. இது குறித்து, கீரைத்துறை காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் சிந்தாமணி பகுதியை சேர்ந்த கருப்பசாமி(31), பாலமுருகன்(26) ஆகியோர் டூவீலர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post பைக் திருடர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Shanmukha Kumar ,Chintamani Vinayakar Street, Madurai.… ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...