×

புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு புதிய குடும்ப அட்டை

ராமநாதபுரம், செப்.27: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொழில் நிமித்தமாக வெளி மாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட உள்ளதால், தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, பிற மாநிலங்களிலிருந்து தொழிலின் நிமித்தம், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களில், இணையதளத்தில் பதிவு செய்த தகுதியுள்ள தொழிலாளர்களில், இதுநாள் வரை குடும்ப அட்டை பெறாத தொழிலாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட உள்ளது. எனவே பிற மாநிலங்களிலிருந்து தொழிலின் நிமித்தம், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் இணையதளத்தில் பதிவு செய்து, தங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் உரிய படிவத்தில், விண்ணப்பம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு புதிய குடும்ப அட்டை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 1...