×

உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க கோரிக்கை

பரமக்குடி,செப்.27: உடல் உறுப்பு தானம் செய்து இறந்தவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் வரவேற்று நன்றி தெரிவிக்கப்பட்டது. மரணங்களின் பின்பு உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் குறைந்தபட்சம் 5 முதல் 8 நபர்கள் மறுவாழ்வு அடைகிறார்கள். தனது மரணத்திற்கு பின்பும் பிறரை வாழவைத்து செல்லக்கூடிய நபர்களின் மரணத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

எட்டு பேருக்கு மறுவாழ்வு அளித்து செல்லும் குடும்பத்தினருக்கு அரசு சலுகை மற்றும் அரசு அரசு வேலை வழங்க வேண்டும் என ஆம்ஆத்மி கட்சியை மற்றும் மெழுகுவர்த்தி நண்பர்கள் பவுண்டேஷன் தொடர்ந்து கோரிக்கை வைத்தது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை ராமநாதபுரம் மாவட்ட ஆம் ஆத்மி கட்சி வரவேற்று நன்றி தெரிவிப்பதாக மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

The post உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED அனைவரும் இணைந்து பணியாற்றி இயற்கை...