×

கால்நடை ஆய்வாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை, செப்.27: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கால்நடை ஆய்வாளர் பயிற்சியை போர்க்கால அடிப்படையில் துவங்கி கால்நடைத் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திஇந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் மரியஅருள் செபாஸ்டியன் தலைமை வகித்தார். மாநில தணிக்கையாளர் ராஜாமுகமது கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வக்குமார், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் தமிழரசன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் பேசினர். கோட்ட செயலாளர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.

The post கால்நடை ஆய்வாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Animal Inspectors Association ,Sivagangai ,Sivagangai Collector's Office ,Tamil Nadu Animal Inspectors Association ,Dinakaran ,
× RELATED பள்ளியில் எமிஸ் பதிவுகளில் இருந்து...