×

விருதுநகரில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

விருதுநகர், செப். 27: விருதுநகரில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முன்பிருந்து மகளிர் இன்னர்வீல் சங்கம், நியூ ஜென் இன்னல் வீல் சங்கம் இணைந்து போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பிருந்து கிளம்பிய பேரணி ராமமூர்த்தி ரோடு, விஎன்பிஆர் பார்க், கல்லூரி சாலையில் முடிவடைந்தது. மாணவ, மாணவியர் போதை தடுப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி சென்றனர். இறுதியில் கிழக்கு காவல் நிலைய எஸ்ஐ ராமச்சந்திரன் மாணவ, மாணவியர் மத்தியில் போதை தடுப்பு விழிப்புணர்வு உரையாற்றினார். என்சிசி அலுவலர் பத்மநாபன், இன்னர் வீல் நிர்வாகிகள் ஜெயா, மீனாகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.

The post விருதுநகரில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Drug prevention awareness rally ,Virudhunagar ,Virudhunagar Government Medical College Hospital ,
× RELATED போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி