×

விருதுநகரில் காத்திருப்பு போராட்டம்

 

விருதுநகர், செப். 27: விருதுநகர் அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பாக போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் தங்கப்பழம் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர்களுக்கு 94 மாத டிஏ உயர்வை நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் அமுல்படுத்த வேண்டும்.

2003க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிஐடியு போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் வெள்ளைத்துரை துவக்கி வைத்தார். ஓய்வு பெற்றார் நல அமைப்பு பொதுச் செயலாளர் போஸ், பொருளாளர் முத்துச்சாமி உள்பட பலர் உரையாற்றினர்.

The post விருதுநகரில் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar Government Transport Corporation Headquarters ,Transport Corporation Retired Parents Welfare ,
× RELATED நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதலை தடுப்பது எப்படி? வேளாண்துறை ஆலோசனை