×

தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12ம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர், செப். 27: மாவட்டத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி பெற்று என்டிசி சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் பெறுவதற்கு பள்ளி கல்வித்துறை மூலம் நடத்தப்பட்ட தமிழ், ஆங்கில மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.10ம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் பெற தேவையான கல்வித்தகுதிகள் 8ம் வகுப்பு தேர்ச்சி, என்டிசி, என்ஏசி, 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிளஸ் 2 வகுப்பிற்கு இணையான சான்றிதழ் பெற தேவையான கல்வித்தகுதிகள் 10ம் வகுப்பு தேர்ச்சி, என்டிசி, என்ஏசி, பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி பாடத்தில் தேர்ச்சி. மேலும் விபரங்களுக்கு விண்ணப்படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் www.skilltraining.tn.gov.in, http://www.skilltraining.tn.gov.in/, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் பெற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உரிய விண்ப்ப படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த இணைப்புகளுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் அக்.3க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண் 04562-252655, 294382 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12ம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,NTC ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...