தர்மபுரி, செப்.27: தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு தொகுதிகளில் தபால்துறை சார்பில் “என் மண், என் தேசம்” நிகழ்ச்சி நாளை(28ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த வேளையில், இந்த நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையிலும், இந்த மண்ணிற்கு வணக்கம் செலுத்தும் வகையிலும் “என் மண் என் தேசம்” இயக்கம் தொடங்கப்பட்டு நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தர்மபுரி மாவட்டத்தில் நேரு யுவகேந்திராவும், தர்மபுரி தபால் கோட்டமும் இணைந்து நாளை (29ம்தேதி), நாளை மறுநாள் (30ம்தேதி) ஆகிய இரு நாட்களிலும் பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு தொகுதிகளில் வீடுகள் தோறும் அமுதக் கலசத்தில் மண் சேகரிக்கும் நிது. இந்த நிகழ்ச்சி தர்மபுரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இவ்வாறு முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
The post என் மண், என் தேசம் நிகழ்ச்சி appeared first on Dinakaran.
