×

செங்குன்றம் அடுத்த வடகரையில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்: எம்எல்ஏ வழங்கினார்

புழல்: செங்குன்றம் அடுத்த வடகரையில், மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் வழங்கினார். செங்குன்றம் அடுத்த வடகரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 94 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு வடகரை ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். புழல் ஒன்றியக்குழு தலைவர் தங்கமணி திருமால், புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் சரவணன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் சாந்தி பாஸ்கரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வெங்கடேசன், பூவராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் இதில் கலந்து கொண்டு 94 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினார்.

மேலும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 363 மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கந்தசாமி, புள்ளிலைன் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ரமேஷ், திமுக ஒன்றிய அவைத்தலைவர் வழக்கறிஞர் செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post செங்குன்றம் அடுத்த வடகரையில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Chenggunram ,Vadakara ,S. Sudharsanam ,Senkunram ,Senggunram ,Vadakarai Govt ,Vadakarai ,Dinakaran ,
× RELATED செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் கடை,...