×

திருவள்ளூரில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரத்திற்கு பாராட்டு விழா நேற்று முன்தினம் திருவள்ளூரில் நடைபெற்றது. விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஜான், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சசிகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட சேவாதள தலைவர் இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் விக்டரி மோகன், அருள்மொழி, வடிவேல், அமுதன், சரஸ்வதி, இளங்கோவன், ரமேஷ், மணவாளன், புருஷோத்தமன், ரகுராமன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் மாவட்டத் தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மாநில நிர்வாகிகள் சதா சிவலிங்கம், பொன் கிருஷ்ணமூர்த்தி, ஏகாட்டூர் ஆனந்தன், தளபதி பாஸ்கர், ரங்கபாஷ்யம், ஜோதி ராமலிங்கம், குணாநிதி, இமாலய அருண்பிரசாத், கோவிந்தராஜ், வெங்கடேஷ், திவாகர், சுந்தரவேலு ஆகியோர் ஏ.ஜி.சிதம்பரத்தை வாழ்த்தி பேசினர். இதில் வேப்பம்பட்டு அன்பழகன், வட்டாரத் தலைவர்கள் பழனி, சதீஷ், முகுந்தன், ராமன், சிவக்குமார், பெரியசாமி, மூர்த்தி, கார்த்திகேயன், துரைவேல், ஜோஷி மற்றும் ஷபீர், கலீல்ரகுமான், பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூரில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Tiruvallur ,Thiruvallur ,Thiruvallur North District Congress Committee ,AG Chidambaram ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியை கண்டித்து பா.ஜவினர் ஆர்ப்பாட்டம்