×

கடலூர் மாவட்டம், புதுச்சேரி பகுதியில் பைக்குகள் திருடி விற்ற 3 பேர் கைது

சிதம்பரம், செப். 27: சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடு போனது. இதையடுத்து கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவின்பேரில். சிதம்பரம் பொறுப்பு டிஎஸ்பி நாகராஜ் மேற்பார்வையில், வாகன திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க நகர காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பகுதியில் சிசிடிவி கேமராக்கள் மூலம் இரு வாகனங்கள் திருடியவர்களை அடையாளம் கண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், விருத்தாசலம் தாலுகா பெரியாகுறிச்சி புதுநகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சின்னசாமி மகன் கலைவாணன் (23) என்பவர் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, விருத்தாசலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 14 இரு சக்கர மோட்டார் வாகனங்களை திருடியது தெரியவந்தது. மேலும் இவர் வாகனங்களை திருடி புவனகிரி தாலுகா சின்னகுமட்டி கிணற்றங்கரை தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் நிதீஷ்குமார்(25), சின்னகுமட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுந்தரம் மகன் சூர்யா (21) ஆகியோர் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீசார், நேற்று சிதம்பரம் மேல விதி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். இதில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 14 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

The post கடலூர் மாவட்டம், புதுச்சேரி பகுதியில் பைக்குகள் திருடி விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Cuddalore district ,Chidambaram ,Bhuvanagiri ,Chetiathoppu ,Cuddalore ,
× RELATED முகநூலில் பழகிய வாலிபருக்கு பைக்...