- ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பேரணி
- யூனியன் அரசு
- ச.M.Nasser
- சட்டமன்ற உறுப்பினர்
- ஆவடி
- ஆவடி
- எஸ்எம் நாசர் எம்எல்ஏ
- தின மலர்
ஆவடி: ஆவடியில் ஒன்றிய அரசை கண்டித்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு பேரணியாக சென்றனர். ஆவடியில் தனியார் சைக்கிள் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடாத ஒன்றிய அரசை கண்டித்து, ஆவடி சோதனைச்சாவடி அருகே பேரணி ஊர்வலம் நேற்று நடந்தது. இதில், ஆவடி எம்எல்ஏ சாமு நாசர் பங்கேற்று கோஷங்களை எழுப்பி பேரணியை தொடங்கி வைத்தார். இதில், குறைந்தபட்ச பென்ஷன் மாதம் ரூ.9,000 வழங்கிட வேண்டும். உடனடியாக உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி மாதம் ரூ.3,000 பஞ்சப்படி வழங்கிட வேண்டும். இபிஎப் 95 பென்சனுக்கு இஎஸ்ஐ மருத்துவ வசதி திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். வருங்கால வைப்பு நிதி ஆணையம் பென்ஷனை உயர்த்த காலம் கடத்தும் போக்கினை கைவிட வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷங்களை எழுப்பி 100க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று, தொழிற்சாலை எதிரே பேரணியை முடித்தனர். இதில், ஆவடி மாநகரப் பொறுப்பாளர் சண்பிரகாஷ், பகுதிச் செயலாளர்கள் பேபிசேகர், நாராயணபிரசாத், அந்திரிதாஸ், ஆதிகேசவன், சுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி, பாபு, கோபி, பாஸ்கர், கௌரிகுமார், டாக்டர் ராஜா, ராமு மற்றும் ஓய்வு பெற்ற தொழிற்சங்க நிர்வாகிகள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
* கழிவு நீர் உறிஞ்சும் வாகனம்
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15வது நிதிக்குழு வாழிய திட்டத்தின் கீழ் 8,000 லிட்டர் கொள்ளவு கொண்ட கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் மற்றும் அடைப்புகளை நீக்கும் ஜெனரேட்டின் மிஷின் வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் சா.மு. நாசர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆவடி மேயர் ஜி.உதயகுமார், மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், மாநகர பொறுப்பாளர் சன்பிரகாஷ், பகுதிச் செயலாளர் பேபிசேகர், மண்டலக்குழு தலைவர் அமுதா பேபி சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பேரணி: சா.மு. நாசர் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.