×

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி

ஆவடி: சென்னை, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (55). இவர், போரூர் சக்தி நகரில், ‘எச்.ஆர். மேனேஜ்மென்ட்’ என்ற பெயரில், நிறுவனம் நடத்தி வருகிறார். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக போலியாக விளம்பரம் செய்துள்ளார். இதைப் பார்த்த பலர் வெளிநாட்டுவேலை மோகத்தில், பணத்தை அவரிடம் செலுத்தியுள்ளனர். இதுபோன்று பல வாலிபர்களிடம் ரூ.13 லட்சத்தை பாலசுப்பிரமணியம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள், பொங்களூரு தூதரகத்தில் உள்ள வெளியுறவுத்துறை செயலர் மீனாவிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் பாலசுப்ரமணியம் பொது மக்களை ஏமாற்றியது உண்மை என தெரிந்தது. இதையடுத்து, உதவி ஆணையர் பொன் சங்கர், ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுப்பிரமணியத்தை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

The post வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Balasubramaniam ,Alapakkam, Chennai ,Borur Shakti Nagar ,
× RELATED வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி