×

காஞ்சிபுரத்தில் தொற்றா நோய் கருத்தரங்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு சார்பில், இந்திய அளவிலிருந்து தொற்றா நோய் தடுப்பு வல்லுநர்கள் மற்றும் தொற்றா நோய் தடுப்பு இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட ‘தொற்றா நோய் இல்லா தமிழகம்’ என்ற ஒருநாள் கருந்தரங்கம் நடந்தது. அதனை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது, ‘தொற்றா நோய் குறித்தும், அதன் முக்கியத்துவம் மற்றும் இந்நோயை கண்டறியும் செயல் திட்டம் தீட்ட இக்கருத்தரங்கம் பயன்படும்’ என்றார். இந்த கருத்தரங்கில், தொற்றா நோய் இல்லா தமிழகமாக செயல் திட்டம் தீட்டுவது அதற்கான வழிகாட்டுதல், சமூக அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி நடைமுறை படுத்துவதற்கான வழிகாட்டு ஆய்வுகள், குழு விவரங்கள் அனைத்து பிரதிநிதிகள் மூலம் வடிவமைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், இணை இயக்குநர் (தொற்றா நோய்) கிருஷ்ணராஜ், குன்றத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் சரஸ்வதி மனோகரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பிரியாராஜ், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) உத்தாரா பரத்குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள், காவல் துறை, தொழிற்மையம், கனிமவளம், மருத்துவம், சமூக நலத்துறை, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தனியார் மருத்துவ சங்கம், தொண்டு நிறுவனங்கள், காப்பீட்டு திட்ட அலுவலர்கள், ஊட்டச்சத்துத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் தொற்றா நோய் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : on Infectious Diseases ,Kancheepuram ,Kanchipuram ,Kanchipuram District Rural Development Agency ,Tamil Nadu government ,
× RELATED காஞ்சிபுரத்தில் கடும் பனிப்பொழிவால்...