×

உடற்பயிற்சியாளர் தூக்கிட்டு தற்கொலை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் உடற்பயிற்சியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருக்கழுக்குன்றம் சங்கு மேட்டு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (37). இவர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் அமைத்து ஏராளமானோருக்கு பயிற்சி கொடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று, இவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ராதாகிருஷ்ணனை மீட்டு திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராதாகிருஷ்ணன் கடன் தொல்லையால் தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

The post உடற்பயிற்சியாளர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thirukkavukuram ,Radhakrishnan ,Thirukkulkundam Sangh Madu Street ,
× RELATED நாங்கள் தலையிடாதவாறு சட்டம் இயற்ற...