×

மறைமலைநகர் அருகே ஐம்பொன் சிலை திருட்டு

செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே, ஐம்பொன் சிலையை திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே மகேந்திராசிட்டி பகுதியில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து கடந்த 24ம் தேதி அதிகாலை 16 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை மற்றும் 11 கிலோ காமாட்சி விளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

அதன் புகாரின்பேரில், மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை பொத்தேரி பகுதியில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 11 கிலோ காமாட்சி விளக்குகளை பறிமுதல் செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post மறைமலைநகர் அருகே ஐம்பொன் சிலை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Aimpon ,Kiramalai Nagar ,Chengalpattu ,Chiramalai Nagar ,Chengalpattu district ,Mahendracity ,Kiramalainagar ,
× RELATED மரக்கன்று நட தோண்டிய குழியில் கிடைத்த...