×

காஞ்சி, செங்கை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நபிகள் நாயகம் பிறந்தநாள், காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி நாளை மற்றும் வரும் 2ம் தேதி ஆகிய தினங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கலெக்டர்கள் கலைச்செல்வி மோகன், ராகுல்நாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் கீழ்கண்ட நாட்களில் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பினை தொடர்ந்து, 28.9.2023 (வியாழக்கிழமை) நபிகள் நாயகம் பிறந்தநாள் மற்றும் 2.10.2023 (திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தி தினம். எனவே, மேற்படி நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் அனைத்து நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

The post காஞ்சி, செங்கை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல் appeared first on Dinakaran.

Tags : TASMAC ,Kanchi, Senkai district ,Kanchipuram ,Kanchipuram, Chengalpattu district ,Prophet Muhammad ,Gandhi Jayanti day ,Dinakaran ,
× RELATED தொடர் மழைக் காரணமாக காஞ்சி, செங்கை மாவட்டத்தில் நிரம்பி வழியும் 146 ஏரிகள்