×

பசுமை தமிழ்நாடு தினத்தையொட்டி விசூர் கிராம வனப்பகுதியில் 2500 மரக்கன்று நடும் நிகழ்ச்சி: சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

உத்திரமேரூர்: பசுமை தமிழ்நாடு தினத்தையொட்டி, விசூர் கிராம வனப்பகுதியில் 2500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் தொடங்கி வைத்தார். உத்திரமேரூர் அருகே விசூர் கிராம வனப்பகுதியில், பசுமை தமிழ்நாடு தினத்தையொட்டி தமிழ்நாடு வனத்துறை வனவியல் விரிவாக்க மையம் சார்பில் 2500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை உதவி வன பாதுகாவலர் செசில்கில்பர்க், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன், பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வனசரக அலுவலர் பார்த்திபன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் கூறுகையில், ‘‘பசுமையினை பேணிகாப்பதன் அவசியம் அறிந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பசுமை தமிழ்நாடு தினத்தில் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அவற்றினை முறையாக பராமரித்து பலனடைய வேண்டும்’ என்றார். இதனைத்தொடர்ந்து தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் வனப்பகுதி முழுவதும் 2500 பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பசுமை தமிழ்நாடு தினத்தையொட்டி விசூர் கிராம வனப்பகுதியில் 2500 மரக்கன்று நடும் நிகழ்ச்சி: சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Green Tamil Nadu Day ,Visoor village forest ,Sundar ,MLA ,Uttara Merur ,
× RELATED அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கை...