×

போக்குவரத்து துறை அறிவிப்பு; தொடர் விடுமுறையையொட்டி 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை காரணமாக 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு விரைவுப்போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மிலாடி நபி, வாரவிடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை தினங்களையொட்டி சொந்த ஊர்களுக்கு பயணிகள் செல்வார்கள். எனவே, பயணிகள் முன்பதிவும் கூடுதலாகவே உள்ளது. பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும் பாதுகாப்பாக திட்டமிட்டபடி பயணிக்கவும் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் இன்றைய தேதியில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்நாட்களில் சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள இன்று 16,980 பயணிகளும், 29ம் தேதி 14,473 பயணிகளும் மற்றும் அக்.3ம் தேதி 7,919 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று முதல் தினசரி இயக்க கூடிய பஸ்களுடன் கூடுதலாக 250 பஸ்களும் மற்றும் 29ம் தேதி 450 பஸ்களும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி அக்.2ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அக்.2ம் தேதி திங்கள்கிழமையன்று பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 17,242 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

The post போக்குவரத்து துறை அறிவிப்பு; தொடர் விடுமுறையையொட்டி 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Transport Department ,Chennai ,Miladi Prophet ,Gandhi ,Jayanti ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு...