×

செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்: மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை சமூகமாக முடிந்ததையடுத்து செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை: கோவிட்-19 காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள் உண்ணாவிரதத்தில் இருந்தவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சப் மா.சுப்ரமணியன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை ஏற்றுக் கொண்டதன் முடிவில் இதற்காக இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு அமைத்து மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக சான்றிதழ் சரிபார்க்கும் பணி மற்றும் இனசுழற்சி முறையும், முதுநிலை முறையை பின்பற்றியும், சரிபார்க்க அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்த போது இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் உதயகுமார் தலைமையில் எம்ஆர்பி செவிலியர்கள் சங்க உறுப் பினர் கள் 5 பேரும் கலந்துக் கொண்டனர். விரைவில் இவர்களை பணியமர்த்துவதற்கு உடனடியாக ஆவனம் செய்ய மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டு முதல்வர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்க்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்: மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Department of Public Welfare ,Chennai ,Minister of Public Welfare ,M.Subramanian ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...