×

ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 51ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணை: பிரதமர் மோடி வழங்கினார்

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி நேற்று வழங்கினார். ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நாட்டின் 46 இடங்களில் நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்து கொண்டு 51ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அந்தமான் நிகோபர் தீவில் மட்டும் ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் வழங்கினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, அரசு நிர்வாகங்களில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அரசு திட்டங்களில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஊழல் மற்றும் சிக்கல்களை தடுத்து நம்பகத்தன்மையை ஊக்குவிப்பதோடு மனநிறைவையும் அதிகரித்துள்ளது. புதிதாக பணியில் சேர இருப்பவர்கள் ‘பொதுமக்கள் முதலில்’ என்ற குறிக்கோளுடன் பணியாற்ற வேண்டும். நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு தொழில்நுடப்த்தை பயன்படுத்த வேண்டும். தொடர் கண்காணிப்பு, திட்டத்தை நடைமுறைப்படுத்தல், அரசு திட்டங்களில் 100 சதவீதம் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பெருமளவில் பங்கேற்பது ஆகியவற்றின் அடிப்படையில் புதிய மனநிலையுடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகின்றது” என்றார்.

The post ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 51ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணை: பிரதமர் மோடி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?