×

உலக இதய தினத்தை முன்னிட்டு காவலர்கள் இதய பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம்: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை ஏற்பாடு

சென்னை: உலக இதய தினத்தை முன்னிட்டு காவலர்களுக்கு இதய பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடந்த ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை திட்டமிட்டுள்ளது. இதய நோய் காரணமாக உலகம் முழுவதும் ஆண்டுக்கு 2 கோடி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதை எதிர்த்துப் போராடும் வகையில், உலக இதய கூட்டமைப்பு ‘உலக இதய தினம்’ என்று உருவாக்கி உள்ளது. இந்த தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில், உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே இதய நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டு உலக இதய தினத்தை முன்னிட்டு காவலர்களுக்கு இதய பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடந்த சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை திட்டமிட்டுள்ளது. ஒரு நாளுக்கு 20 காவலர்களுக்கு என 600 காவலர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறியதாவது: உலக இதய தினத்தை முன்னிட்டு காவலர்களுக்கு இதய பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதய ஆபத்துள்ள காவலர்களை பரிசோதனை செய்வது தொடர்பாக மாநகர காவல் ஆணையரிடன் பேசியுள்ளோம். 29ம் தேதி முதல் அடுத்து ஒரு மாதத்திற்கு ஒரு நாளுக்கு 20 நபர்கள் என 600 காவலர்களுக்கு இதய பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறோம். தேவைப்பட்டால் கூடுதலாக காவலர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள இருந்தால் இந்த முகாமினை 2 மாதம் நடத்த இருக்கிறோம். இந்த சிறப்பு முகாமில் மூத்த இதய நிபுணர்கள் கொண்டு இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளனர். பரிசோதனைக்கு பிறகு மருத்துவ தேவை இருந்தால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post உலக இதய தினத்தை முன்னிட்டு காவலர்கள் இதய பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு முகாம்: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Government Hospital ,World Heart Day ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...