×

மினி வேன் கவிழ்ந்து 7000 முட்டை நாசம்

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் பரமசிவம். இவர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மினி வேன் மூலம் முட்டை சப்ளை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று 10 ஆயிரம் முட்டைகளை வேனில் ஏற்றிக்கொண்டு கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரில் உ்ள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக சென்றார். அப்போது, மழைநீர் வடிகால்வாய் மீது ஏறும்போது மினி வேன் கவிழ்ந்து, வண்டியில் இருந்த 10 ஆயிரம் முட்டைகள் சாலையில் சரிந்தன. இதில், 7000க்கும் மேற்பட்ட முட்டைகள் உடைந்தன. அதைப் பார்த்த அந்தபகுதி மக்கள் விரைந்து வந்து உதவி செய்தனர். மேலும், 2000 முட்டைகளை உடையாமல் அப்பகுதி மக்கள் மீட்டனர்.

The post மினி வேன் கவிழ்ந்து 7000 முட்டை நாசம் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Korukuppet ,Vannarpet ,
× RELATED வாகன சோதனையின்போது உரிய ஆவணமில்லாத ரூ.15 லட்சம் பறிமுதல்