×

பிரதமரின் ஆலோசகர் பதவி நீட்டிப்பு

புதுடெல்லி, செப்.27: பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக 2021ம் ஆண்டு அக்டோபரில் முன்னாள் அதிகாரி அமித் கரே நியமிக்கப்பட்டார். இவரது இரண்டு ஆண்டு பதவி காலம் முடிவடையும் நிலையில் அவரது ஆலோசகர் பதவி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. வழக்கமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் அக்டோபர் 12ம் தேதிக்கு பிறகும் நீட்டிப்பதற்கு ஒன்றிய அமைச்சரவையின் நியமன குழு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் பயோடெக்னாலஜி துறை செயலாளர் ராஜேஷ் எஸ் கோகலேவின் பதவிக்காலமும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமரின் ஆலோசகர் பதவி நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Amit Khare ,Narendra Modi ,Dinakaran ,
× RELATED பாஜகவுக்கு அரசியல் அடியாகவும்,...