×

முன்னாள் பிரதமர் மன்மோகன் பிறந்த நாள்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 91வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் நல்ல ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேர்மை, நாட்டை கட்டியெழுப்புதல் மற்றும் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை எனக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கிறது ” என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொது செயலாளர்கள் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post முன்னாள் பிரதமர் மன்மோகன் பிறந்த நாள் appeared first on Dinakaran.

Tags : Former ,Manmohan ,New Delhi ,Former Congress ,Manmohan Singh ,Modi ,
× RELATED காங். முன்னாள் தலைவர் சோனியா பிறந்த...