×

சென்னை மாநகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிக்கை.!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் 19.09.2023 அன்று நடைபெற்ற வடகிழக்கு பருவமழை ஆய்வுக்கூட்டத்தின் போதும், 21.09.2023 அன்று நடைபெற்ற களஆய்வின் போதும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைப் பணிகளை விரைந்து மற்றும் தரமாக முடிக்கவும், தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் அவ்வப்போது ஆய்வுக்கூட்டம் நடத்தி கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்கள். அதனடிப்படையில், தலைமை செயலாளர் அவர்கள் 22.09.2023 அன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகள் குறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை மற்றும் சேவைத் துறைகளிடம் ஆய்வு செய்தார்கள்.

இக்கூட்டத்தில் முதலமைச்சரின் செயலர்-1 / கூடுதல் தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் / தலைவர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம். பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர். கூடுதல் தலைமைச் செயலாளர். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூடுதல் மாநகர காவல் ஆணையர் (போக்குவரத்து) முதன்மைச் செயலாளர்/மேலாண்மை இயக்குநர், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநர், இணை ஆணையர் (பணிகள்) மற்றும் வட்டார துணை ஆணையர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்கள்.

தலைமைச் செயலாளர் மண்டலம் வாரியாக சேவை துறையில் மேற்கொண்டுவரும் சாலை வெட்டு பணிகள் குறித்தும், சென்னை குடிநீர் வாரியம் சாலை வெட்டு முடிக்கப்பட்ட இடங்களில் சாலைகளை சீரமைக்கவும். புதிய சாலைகளை புனரமைக்கவும் அறிவுறுத்தினார்கள். மேலும், சாலை வெட்டுகளில் உள்ள ஓட்டுப்பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்கள். மேலும், சேதமடைந்த சாலைகளை புதுப்பிக்க மண்டல வாரியாக குறுகிய கால ஒப்பந்தம் மூலம் சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள். இப்பணிகளுக்கு பரப்பளவு அடிப்படையில் அல்லாமல், கொள்ளளவு அடிப்படையில், தேவைக்கேற்ப உடனடியாக ஒப்பந்தபுள்ளிகள் கோரவும். இறுதி செய்யவும், பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார்கள். குறிப்பாக மண்டலம்-2, 7, 11, 12 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் அதிகளவில் சாலை வெட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், மேற்கண்ட முறையில் ஒப்பந்தபுள்ளிகள் கோரி. பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் சாலை வெட்டுக்கள் முடிக்கப்பட உள்ள இடங்களில் சீரமைக்கப்படவுள்ள 140 சாலைகளிலும் மற்றும் சாலை வெட்டு சீரமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் 277 சாலைகளிலும் துரிதமாக அக்டோபர் 10 க்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் துவங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டு பணிகளை 30.09.2023- க்குள் முடிக்க அறிவுறுத்தினார்கள். இது தவிர வேறு எந்த சாலை வெட்டுப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்கள். மேலும், சாலை பணிகளை தரமாகவும். விரைவாகவும் முடிக்க ஏதுவாக தொழில் நுட்ப உதவியாளர்கள் அல்லது PMC மூலமாக பணியாளர்களை நியமிக்கவும், பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார்கள். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சாலை வெட்டுகளை முறையாக சீரமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர் மற்றும் வட்டார துறை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் பகுதிப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்களுடன் ஆலோசித்து ஒவ்வொரு சாலை வாரியாக மைக்ரோ மேனஜ்மெண்ட (Micro Management) முறையில் பணிகளை முடிக்க சரியான கால கெடுவை நிர்ணயம் செய்யவும் அறிவுறுத்தினார்கள்.

அவ்வாறு சாலை வெட்டு பணிகள் முடிக்கப்படும் இடங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைத்து, மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். கே.கே.நகர் அண்ணா பிரதான சாலையில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தற்போது 75 சதவீத பணிகளை முடித்துள்ளது என்றும், மீதமுள்ள பணிகள் வடகிழக்கு பருவ மழைக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த சாலையில். சேவைத் துறையினரால் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தலைமைச் செயலாளர் அவர்கள் இச்சாலையினை சிறந்த முறையில் சீரமைக்க அறிவுறுத்தினார்கள். மண்டலம்-2, நெடுஞ்செழியன் சாலையில் மீதமுள்ள சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 100 மீட்டர் பணிகளை 30.09.2023-க்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள். பாடசாலை தெருவில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டதால், சாலை வெட்டு சீரமைப்புப் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சியால் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

பார்த்தசாரதி சாலையில் பணிகள் முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டால் இச்சாலையிலும் சாலை வெட்டு சீரமைப்புப் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சியால் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள். அனைத்து பேருந்து தட சாலைகளிலும் சாலை வெட்டுகளை சீரமைக்கும் பணி அக்டோபர் முதல் வாரத்திற்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள். நியு ஆவடி சாலையில் தமிழ்நாடு மின் பகிர்மான சாலை வெட்டு பணிகள் முடிக்கப்பட்டு. ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் இச்சாலை வெட்டு சீரமைப்புப் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சியால் விரைந்துமுடிக்குமாறு அறிவுறுத்தினார்கள். அயனாவரம் சாலையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் குழாய் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட டதாக தெரிவித்ததால் அச்சாலையில் சாலை வெட்டுகள் சீரமைப்புப் பணி பெருநகர சென்னை மாநகராட்சியால் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள். பெருநகர சென்னை மாநகராட்சியால் சாலை வெட்டு சீரமைக்கும் பணி மேற்கொள்ளும்போது, போக்குவரத்து இடையூறு சம்பந்தமாக ஏற்படும் இடையூறை, போக்குவரத்து துறை சாலை வேண்டுமென்றும், பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார்கள்.

வடகிழக்கு பருவமழை முடியும் காலம் வரை புதிய சாலை வெட்டு அனுமதி வழங்க வேண்டாம் என அறிவுறுத்தினார்கள். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தினமும் சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களின் விவரத்தினை சென்னை ெ பருநகர போக்குவரத்து காவல் துறையினருக்கு வழங்கவும், அதனடிப்படையில் தார் கலவை லாரி மற்றும் இதர சாலை சீர் அமைக்கும் பணிக்கு கொண்டுவரும் வாகனங்களுக்கு பகல் நேரங்களில் போக்குவரத்து துறையில் அனுமதி அளிக்குமாறும் மற்றும் பணிகளை விரைந்து முடிக்க ஒத்துழைப்பு அளிக்குமாறும் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். கூடுதல் தலைமை செயலாளர் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அவர்கள் நெடுஞ்சாலை துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்த விவரங்களை தெரிவித்தார்கள். 100 அடி உள்வட்ட சாலையில் (Torrent Gas) மேற்கொண்ட சாலைவெட்டு பணிகள் முடிவுடைந்ததாகவும், சாலை பணி சீர அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 30.09.2023 முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்கள். ஈ.வே.ரெ. பெரியார் சாலையில் சென்னை குடிநீர் வாரியம். கழிவு நீர் குழாய் அமைக்கும் பணிகள் 25.09.2023 முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள்.

இவ்விடங்களில் நெடுஞ்சாலை துறையினர். 30.09.2023க்குள் சாலை சீரமைக்கும் பணி மேற்கொண்டு முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள். உள்வட்ட சாலையில் பாடி மேம்பாலம் முதல் மாதவரம் ரவுண்டானா வரை 2.1 கி.மீ. பணிகள் முடிக்கப்பட்டதாக தெரிவித்தார்கள். தலைமைச் செயலாளர் அவர்கள். சென்னை குடிநீர் வாரியம், சாலைவெட்டு சீரமைப்பு பணிக்கு செலுத்தவேண்டிய தொகை தாமதம் ஆவதால், நெடுஞ்சாலை துறையினர், தங்களது நிதியில் சாலைவெட்டு சீரமைப்புபணிகளை மேற்கொண்டு. சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறும். பின்னர் சென்னை குடிநீர் வாரியத்திடமிருந்து பணம் திரும்ப பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்கள்.

எருக்கஞ்சேரி சாலையில் மூலக்கடை சந்திப்பு முதல் மாதவரம் ரவுண்டானா மேற்கொள்ளப்படும் சாலை பணிகள் 30.09.2023 முடிக்குமாறு வரை அறிவுறுத்தினார்கள். வேளச்சேரி பிரதான சாலையில் விஜய நகர் சந்திப்பு அருகில் சென்னை குடிநீர் வாரியம் (Testing of Water line) பணிகளை 25.09.2023க்குள் முடிக்குமாறும் சாலைபணிகளை 30.09.2023க்குள் முடிக்குமாறும் அறிவுறுத்தினார்கள். சென்னை-திருத்தணி நெடுஞ்சாலை. பாடி அருகில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தையும் 30.09.2023க்குள் முடிக்குமாறும் அறிவுறுத்தினார்கள். மணப்பாக்கம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் பணிகளை விரைந்து முடிக்குமாறும், முடிக்கப்பட்ட இடங்களில் சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தினார்கள். மவுண்ட் பூந்தமல்லி சாலையில் 30.09.2023க்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

The post சென்னை மாநகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிக்கை.! appeared first on Dinakaran.

Tags : Municipal Administration and Drinking Water Supply Department ,Chennai ,Chief Minister ,Tamil Nadu ,Northeast Monsoon Lab ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...