×

பள்ளிகொண்டாவில் தொடர் கனமழை: அகரம்சேரி பாலாற்றில் தரைப்பாலம் சேதம்

பள்ளிகொண்டா: பள்ளிகொண்டாவில் தொடர் கனமழையால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அகரம்சேரியில் தரைப்பாலம் சேதமானது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. இதேபோல் பள்ளிகொண்டா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை கொட்டியதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பாலாற்று நீர்வரத்து கால்வாய்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலையில் பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி கிராமத்தில் இருந்து குடியாத்தம் செல்வதற்கு அகரம்சேரி பாலாற்றில் தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டபோது இந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து தற்காலிக மண் சாலை அமைத்து அந்த பாலத்தின் வழியாக பொதுமக்கள் சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் மழைக்காரணமாக தற்காலிக பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமமடைந்துள்ளனர். இதனால் அகரம்சேரி பாலாற்றில் நிரந்தரமாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பள்ளிகொண்டாவில் தொடர் கனமழை: அகரம்சேரி பாலாற்றில் தரைப்பாலம் சேதம் appeared first on Dinakaran.

Tags : Pallykonda ,Akaramseri Balakar ,PALLICONDA ,Akaramseri ,Bhalaya ,Palligonda ,Vellore district ,Akaramseri Palace ,
× RELATED வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில்...