×

இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு: 66,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது சென்செக்ஸ்..முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே ஏற்ற இறக்கங்களுடன் இருந்த சென்செக்ஸ் 66,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 78 புள்ளிகள் குறைந்து 65,945 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. டெக் மகிந்திரா, இண்டஸ்இண்ட் வங்கி, இன்போசிஸ் பங்குகள் 1%, ஏசியன் பெயின்ட்ஸ், கோட்டக் வங்கி பங்குகள் 0.8% விலை குறைந்தன. ஐசிஐசிஐ வங்கி, டைட்டன், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்செர்வ், விப்ரோ பங்குகளும் விலை குறைந்து கைமாறின.

நெஸ்லே இந்தியா பங்கு 1.4%, டாடா ஸ்டீல் பங்கு 1%, மகிந்திரா & மகிந்திரா பங்கு 0.6% விலை உயர்ந்தன. பஜாஜ் ஃபைனான்ஸ், எச்.டி.எஃப்.சி. வங்கி, என்.டி.பி.சி., எல்&டி, அல்ட்ரா டெச் சிமென்ட் பங்குகளும் விலை அதிகரித்தன. தொடர்ந்து, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து 19,665 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு: 66,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது சென்செக்ஸ்..முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,MUMBAI ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!