×

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டம்

தஞ்சாவூர்: நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி முறிவை நிரந்தர பிரிவாக பார்க்கிறேன் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழனாக பிறந்த எல்லோரும் தமிழர்கள் அல்ல, தமிழுக்காக, தமிழ் இனத்துக்காக போராடுபவர்கள் தமிழர்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிப்பார்களா என்ற கேள்விக்கு சீமான் பதில் அளித்துள்ளார். தமிழரான ப.சிதம்பரம் நினைத்திருந்தால் ஈழ படுகொலையை தடுத்திருக்கலாம் என்று சீமான் தெரிவித்துள்ளார். தமிழர் மீட்சியே தமிழர் எழுச்சி என்ற கோட்பாட்டை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Chief Coordinator ,Seeman Schemann Schemantha ,Nadakshaman ,Thanjavur ,Seeman ,Bajaka alliance ,Seaman Scheme ,Nadic ,Dinakaran ,
× RELATED நடிகை விஜயசாந்தி காங்கிரசின்...