×

திருவாரூரில் 2 பள்ளிகளில் மதுபாட்டில்கள் கிடந்ததால் தலைமை ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு

திருவாரூர்: திருவாரூரில் 2 பள்ளிகளில் மதுபாட்டில்கள் கிடந்ததால் தலைமை ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது பள்ளிகளில் கழிவறை வசதிகள் சரியாக இல்லாததும் கண்டறியப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரையும் பணியிடை நீக்கம் செய்ய பொதுக்கணக்குக்குழு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏ அடங்கிய பொதுக்கணக்கு குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர் அதில் தலைவராக இருக்கக்கூடிய செல்வப்பெருந்தகை அவர்கள் ஆய்வு மேற்கொண்டிருக்கும் போது திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகே உள்ள வேளுக்குடி என்கின்ற அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின் போது அந்த பள்ளிக்கூடத்தில் காலி மதுபாட்டில்கள் மற்றும் கழிவறைகள் மிகவும் மோசமாக பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து அங்கிருந்த பொதுக்கணக்குக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஆசிரியர்களை கண்டித்துள்ளனர். அதன் பிறகு பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை இதுகுறித்து உடனடியாக  திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் இரண்டு பள்ளிகளுடைய தலைமை ஆசிரியர்கள் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டு உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்படி அவர்கள் தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

The post திருவாரூரில் 2 பள்ளிகளில் மதுபாட்டில்கள் கிடந்ததால் தலைமை ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Suspend ,Thiruvarur ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அருகே பயங்கரம் உடும்பு...