×

தேனியில் காலாவதியான 100 கிலோ புரோட்டா, 20 கிலோ சிக்கன் பறிமுதல்

*உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி

ஆண்டிபட்டி : தேனியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் காலாவதியான 100 கிலோ புரோட்டா 20 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 16ஆம் தேதி இரவு தனியார் உணவகத்தில் உணவு உண்ட 42 பேர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதில் 14 வயது மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இறைச்சி மற்றும் அசைவ உணவகங்களில் சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. தரமற்ற உணவாக இருந்தால் சம்பந்தப்பட்ட கடையின் உரிமைத்தை ரத்து செய்வதோடு இருக்கும் சீல் வைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரின் அறிவுறுத்தலின்படி தேனி புதிய பேருந்து நிலையம், மதுரை சாலை பெரியகுளம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் அசைவ கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு நகர மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மதன்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் விதம், பாதுகாப்பான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா, உணவில் கலப்பட பொருள் உள்ளதா, காலாவதியான உணவு பொருட்கள் உள்ளதா என்றும், ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 100 கிலோ புரோட்டா மற்றும் 20 காலாவதியான கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது. காலாவதியான பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு 6000 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சத்தீஸ்வரன், ஜனகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தேனியில் காலாவதியான 100 கிலோ புரோட்டா, 20 கிலோ சிக்கன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Theni ,Food Safety Department ,Theni Food Safety Department ,Dinakaran ,
× RELATED தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற...