×

கரையில் உடைப்பால் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகும் அபாயம் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் சீரமைக்கப்படுமா?

*விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

விகேபுரம் : வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் கரைகளில் ஆங்காங்கே உடைந்து காணப்படும் நிலையில் அவற்றை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாபநாசம் தலையணையில் இருந்து விவசாயத்திற்கு வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாபநாசத்தில் தொடங்கி விகேபுரம் வழியாக அம்பை வரை செல்லும் இக்கால்வாய் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கால்வாயில் விகேபுரம் புதுமுனை கீழத் தெரு மற்றும் எஸ்ஆர்வி நகர் வழியாக செல்லும் இடத்தில் கரைகளில் ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுற்றுச்சுவர் உடைந்துள்ளதால் எந்த நேரமும் கால்வாயில் உள்ள தண்ணீர் குடியிருப்பு பகுதியில் புகுந்து சேதத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளது.

அத்துடன் இப்பகுதியில் நடந்து செல்பவர்களும் பைக்கில் செல்பவர்களும் மிகவும் கவனமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. இல்லையெனில் கால்வாயில் விழ வாய்ப்பு உள்ளது.
எனவே, மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நிகழும் முன்பாக சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி இப்பகுதியில் கால்வாயை கரைகளை சீரமைக்க முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் இருந்து வருகின்றனர்.

The post கரையில் உடைப்பால் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகும் அபாயம் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : North Summer ,Gelakiyan Canal ,Vikepuram ,Anangangay ,
× RELATED நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட்...