×

திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் விபத்தில் ராணுவ வீரர் பலி

*ராமநாதபுரம் அருகே பரிதாபம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் ராணுவ வீரர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம், சூரன்கோட்டை அருகே பாப்பாக்குடியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சந்திரசேகர் மகன் பாலசுப்ரமணியன் (26). ராணுவ வீரரான இவர், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததால் கடந்த மாதம் விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்தார்.

ஆக. 21ம் தேதி அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. கடந்த 22ம் தேதி பாலசுப்ரமணியன், டூவீலரில் ராமநாதபுரத்திலிருந்து தேவிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். பேராவூர் பகுதியில் சென்றபோது இவரது டூவீலர் மீது, எதிரே வந்த பொட்டகவயலை சேர்ந்த பாபு (30) என்பவரின் டூவீலர் நேருக்கு நேர் மோதியது.

இதில் பாலசுப்ரமணியனுக்கு தலையில் பலத்த காயம், பாபுவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலசுப்பிரமணியன், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். நேற்று ஆமதாபாத் ராணுவ முகாம் நாயக் சுபேதர் தலைமையில், திருச்சி தலைமை நிலைய ராணுவ வீரர்கள் முன்னிலையில், ராணுவ மரியாதையுடன் பாலசுப்ரமணியன் உடல் நயினார்கோவில் அருகே உள்ள அவரது சொந்த கிராமமான சதுர்வேதமங்கலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட சேதுசீமை பட்டாளத்தை சேர்ந்த விடுப்பில் இருக்கும் ராணுவவீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்த நிலையில் ராணுவ வீரர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் விபத்தில் ராணுவ வீரர் பலி appeared first on Dinakaran.

Tags : Paritapam Ramanathapuram ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’