×

கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இன்று ஊதியம் வழங்கப்படுகிறது!!

சென்னை : கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இன்று ஊதியம் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஊழியர்களுக்கு சம்பளம் இன்று வழங்கப்படும்.
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டது

நிர்வாக காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் தாமதம் ஆகியது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்
உத்தரவின்படி நிதித்துறையின் ஒப்புதல் பெறப்பட்டு அரசாணை எண் 176 இன் கலைஞர்
நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள்,செவிலியர்கள் மருத்துவம் சாரா பணியாளர்கள் அனைவருக்கும் இன்று சம்பளம் வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.

The post கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இன்று ஊதியம் வழங்கப்படுகிறது!! appeared first on Dinakaran.

Tags : Kalain Pannoku Special Hospital ,Chennai ,Kalayan Pannoku Special Hospital ,Pannoku Special Hospital ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...