×

ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்

ராசிபுரம், செப்.26: ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்துக்கான தேர்தல், கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. வேட்புமனு தாக்கல், வாபஸ் வாங்குதல் உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்து, இறுதி பட்டியல் அறிவிக்கப் பட்டிருந்தது. இதையடுத்த நேற்று காலை 10 மணி முதல் 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதில் 102 ஓட்டுகள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 101 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடராஜன் 44 வாக்குகள் பெற்றார். வாசுதேவன் 57 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செயலாளராக ரமேஷ் யுவராஜா வெற்றி பெற்றார். துணைத் தலைவராக சுந்தர்ராஜன். இணை செயலாளராக அருள் முருகன், பொருளாளராக கதிர்வேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், சக வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Rasipuram Criminal Lawyers Association ,Rasipuram ,Criminal Advocates Association ,Rasipuram Integrated Court Complex ,Criminal ,Advocates ,Association ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் ஒன்றியத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு