×

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர் கூட்டம் 304 மனுக்கள் குவிந்தன

மயிலாடுதுறை, செப்.26: மயிலாடுதுறை கலெக்டர் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மனுக்களை அளித்தனர்.

கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 123 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 31 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை கோரி 15 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 54 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 33 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 48 மனுக்களும், மொத்தம் 304 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.6,552 மதிப்பீட்டில் இலவச சலவைப்பெட்டி ஒரு பயனாளிக்கும், தலா ரூ.5,900 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்கள் இரண்டு பயனாளிகளுக்கும் வழங்கினார். இதில் டிஆர்ஓ மணிமேகலை, தனித்துணை கலெக்டர் கண்மணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேசன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

The post மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர் கூட்டம் 304 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Tags : Mayaladududurai ,Mayiladuthurai Collector Meeting ,Collector Mahabarathi ,
× RELATED மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள்...