×

கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் பதிவு வைரல்; அம்ரித் நோனிக்கு வரவேற்பு

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் அம்ரித் நோனி வலி நிவாரணி குறித்து வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது. இந்த தயாரிப்புக்கு மக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அம்ரித் நோனி என்ற வலி ஆயுர்வேத நிவாரணி மருந்துக்கு விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சூர்யகுமார் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில், அம்ரித் நோனி வலி நிவாரணி குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘அம்ரித் நோனி குடும்பத்தில் ஒருவராக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விரைவாக வலியை போக்கும் மருந்து எனும்போது, அம்ரித் நோனி வலி நிவாரணி ஸ்பிரேயைத்தான் நான் நம்புகிறேன்.
இதில் பழமையான ஆயுர்வேத முறைப்படி சிறந்த மூலிகை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வகையான வலிகளையும் உடனடியாக போக்கி குணப்படுத்துகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவை பல லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர். இதன் மூலம் இது மிகவும் வரைலாகி வருகிறது. ஆயுர்வேத முறைப்படி அம்ரித் நோனி வலி நிவாரணி ஸ்பிரே மட்டுமின்றி, டி-பிளஸ், ஆர்த்தோ பிளஸ், காஸ்ட்ரின், பெயின் ஆயில் ஆகியவை தயாரித்து விற்கப்படுகிறது என, இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் பதிவு வைரல்; அம்ரித் நோனிக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Suryakumar ,Amrit Noni ,Chennai ,Suryakumar Yadav ,
× RELATED சூர்யகுமார், இஷான் கிசான் அதிரடி ஆட்டம்; பெங்களூருவை வீழ்த்தியது மும்பை