×

இ-சேவை மையத்தில் முண்டியடித்த பெண்களால் அலுவலக ஊழியர் மயக்கம்: மணலியில் பரபரப்பு

திருவொற்றியூர்: மணலியில் இ-சேவை மையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால், நெரிசலில் அலுவலக ஊழியர் மயங்கி விழந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை மணலி மண்டல அலுவலக வளாகத்தில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ், வீட்டுவரி, மின்சார கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் இ-சேவை மையத்தில் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்காரணமாக தினசரி இந்த இ-சேவை மையத்திற்கு ஏராளமான மக்கள் வந்து செல்வதால் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. வழக்கம்போல் நேற்று மணலி மண்டல அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மேல் முறையீடு செய்ய ஏராளமான பெண்கள் குவிந்தனர்.

அப்போது, தங்களின் மனு குறித்து நிலையை அறிந்துக்கொள்ள திடீரென பெண்கள் முண்டியடித்ததால், கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அங்குள்ள கணினி மற்றும் அனைத்து பொருட்கள் கீழே விழுந்து தேமடைந்தன. மேலும் அலுவலகத்தின் கண்ணாடி உடைந்து விழுந்தது. இதில் இ-சேவை அங்கு தற்காலிக ஊழியராக பணிபுரியும் கீதா என்பவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணலி போலீசார், இ-சேவை மையத்தில் குவிந்திருந்த அனைத்து பெண்களை, மண்டல அலுவலகத்தை வீட்டு வெளியேற்றி, மநகராட்சி அதிகாரிகளின் உத்தரவின்பேரில் இ-சேவை மைய அலுவலக கேட்டை இழுத்து மூடினர். இதனால் ஒருநாள் இ-சேவை மைய பணிகள் பாதிக்கப்பட்டது.

The post இ-சேவை மையத்தில் முண்டியடித்த பெண்களால் அலுவலக ஊழியர் மயக்கம்: மணலியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvotthiyur ,Sandali ,
× RELATED வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது