
செய்யாறு, செப். 26: செய்யாறு அருகே புளியரம்பாக்கம் ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது வாலிபர் தவறி விழுந்தார். இவரை தீயணைப்பு துறையினர் 2 மணிநேரம் தேடினர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் கோனாரின்ராயன் குளக்கரை ஒட்டி உள்ள கிடங்கு தெரு பகுதியில் வசிப்பவர் பரமசிவம், பூ வியாபாரி. இவரது மகன் முத்து(25), இவர் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் சேல்ஸ் ஏஜென்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள புளிரம்பாக்கம் ஏரியில் நண்பருடன் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது ஏரி நீரில் இறங்கி சிறிது தூரம் சென்று வலை வீசியதில் கால் தவறி சேற்றில் சிக்கி உள்ளார். உடன் சென்ற நண்பர் பாலாஜி இதைப் பார்த்ததும் அலறி துடித்து சாலைக்கு வந்து நண்பரை காப்பாற்ற உதவிக்கு அழைத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செய்யாறு தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் 5 தீயணைப்பு படை வீரர்கள் முத்துவின் நண்பர்கள் சிலர் மற்றும் போலீசார் உதவியுடன் தவறி விழுந்த முத்துவை இரண்டு மணி நேரமாக தீவிரமாக தேடினர். இருள் சூழ்ந்ததாலும் போதியம் வெளிச்சம் இல்லாததாலும் தேடும் பணியி சுணக்கம் ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரர்களும் முத்துவின் நண்பர்களும் கரையேறினர். இன்று காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். புளியரம்பாக்கம் ஏரியில் மீன் பிடிக்கச் சென்று தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post மீன் பிடிக்க சென்றபோது தவறி விழுந்த வாலிபர் தீயணைப்பு துறையினர் 2 மணிநேரம் தேடினர் செய்யாறு அருகே புளியரம்பாக்கம் ஏரியில் appeared first on Dinakaran.